மைக்ரோசொப்ட் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? அதிரடி மாற்றத்திற்கு தயாராகுங்கள்

240

இன்றைய கணணி உலகிற்கு அத்திவாரம் போட்டதில் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் பெரும் பங்கு உண்டு.

இந் நிறுவனத்தின் பல சேவைகளை இன்று மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இச் சேவைகளை பயன்படுத்துவதற்காக கணக்குகளை கையாள்பவர்களும் இருக்கின்றனர்.

கணக்குகளை கையாளும்போது அதற்கான கடவுச் சொற்களை பயனர்களே தாம் விரும்பியவாறு தேர்ந்தெடுக்கும் வசதியினை ஏனைய நிறுவனங்கள் போன்று மைக்ரோசொப்ட் நிறுவனமும் வழங்கி வந்தது.

எனினும் இக் கடவுச் சொற்களுள் பாதுகாப்பு குறைவானதும், இலகுவாக கண்டுபிடிக்கக்கூடிய கடவுச் சொற்களும் அடங்குகின்றன.

இதனால் கடந்த காலங்களில் தனி நபர் தகவல்களை திருடும் செயற்பாடுகளில் அதிகளவில் காணப்பட்டன.

இதனைத் தடுப்பதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய நடைமுறை ஒன்றினை கொண்டுவரவுள்ளது.

இதன்படி பயனர்கள் கடவுச் சொற்களை தேர்ந்தெடுக்கும்போது அவற்றுள் பாதுகாப்பு குறைவான கடவுச் சொற்களை தடைசெய்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவுள்ளது.

இது LinkedIn சமூகவலைத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும் 117 மில்லியன் பயனர்களுக்கும் பொருந்தும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

SHARE