மொஹம்மட் இப்­ராஹீம் இன்­சாபின் தொழிற்­சா­லையில் சேவை­யாற்­றிய ஊழி­யர்­க­ளுக்கு பிணை கிடைத்­தது எப்­படி?

209

சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் இன்சாப் அஹ­மட்­டுக்கு சொந்­த­மான, குண்டு தயா­ரிக்க பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் இடங்­களில் ஒன்­றான வெல்­லம்­பிட்டி செப்பு தொழிற்­சா­லையில் சேவை­யாற்­றிய நிலையில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஊழி­யர்கள் 9 பேருக்கு பிணை வழங்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் எஸ்.ஐ.யூ. எனப்­படும் விஷேட விசா­ரணைப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

குறித்த ஒன்­பது பேரும்  வெல்­லம்­பிட்டி பொலிசார் ஊடாக மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் போது ஏற்­பட்ட தவ­றுகள் அல்­லது சரி­யான முறையில் விட­யங்­களை சமர்ப்­பிக்­காமை அல்­லது அச­மந்தப் போக்கு கார­ண­மாக பிணையில் விடு­விக்­கப்­பட்­ட­னரா என விஷேட விசா­ரணைப் பிரிவின் விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

குறித்த ஒன்­பது பேருக்கும் பிணை வழங்­கப்­பட்­டமை தொடர்பில் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்ள  தக­வல்­களை மையப்­ப­டுத்­தியே இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தலை தொடர்ந்து, சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­திய இன்சாப் அஹ­மட்­டுக்கு சொந்­த­மான வெல்­லம்­பிட்­டியில் உள்ள செப்பு தொழிற்­சாலை சோத­னைக்கு உட்படுத்தப்­பட்­டது. இதன்­போது அங்­கி­ருந்த 9 பேர் பொலி­சாரால் கைது செய்­யப்­பட்டு கொழும்பு மேல­திக நீதிவான் முன் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

 

இந்நிலையில்  கடந்த 6 ஆம் திகதி அவ்­வ­ழக்கு மீள விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது  சந்­தேக நபர்கள் 9 பேரும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில்  செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே அனுமதி அளித்தார். இந்நிலையிலேயே  எவ்வாறு சந்தேக நபர்களுக்கு பிணை கிடைத்தது என விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

SHARE