மோசடியாளர்களுக்கு பணம் வழங்கிய கனடிய வரி முகவர் நிறுவனம்

79

 

கனடிய வரி முகவர் நிறுவனம், மோசடியாளர்களுக்கு பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரி மோசடியாளர்களுக்கு இவ்வாறு 37 மில்லியன் டொலர் பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரகசிய ஆவணமொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கோல்ட் லைன் என்ற தொலைதொடர்பு நிறுவனம் தொடர்பில் இவ்வாறு சர்ச்சை எழுந்துள்ளது.மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறையில் வரி மீளளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய வரி முகவர் நிறுவனம் உரிய முறையில் கவனம் செலுத்தாது வரி மீளளிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி நிறுவனங்களை உருவாக்கி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

SHARE