முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, நேற்றையதினம் (09.04.2024) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், 17 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.