மோர்கனின் தலையில் தாக்கிய பந்தால் நடுநடுங்கிப்போனோம்: ஸ்டீவன் ஸ்மித்

350
இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் ஹெல்மட்டில்  பட்ட பந்து அவரது தலைபை தாக்கியதால் அவர் நிலைகுலைந்து போனதைப்பார்த்து நடுநடுங்கிப்போய்விட்டோம்  என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 3-2 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

இங்கிலாந்து 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, அணித் தலைவர் மோர்கன் களமிறங்கினார்.

அவர் ஒரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில், ஸ்டார்க் வீசிய 7-வது ஓவரை எதிர்கொண்டார்.

அந்த ஓவரின் 5-வது பந்தை 144.8 கி.மீ வேகத்தில் ஸ்டார்க் வீசினார். அந்த பந்து நேராக மோர்கனின் ஹெல்மெட்டைத் தாக்கியது.

இதில் நிலைகுலைந்து தடுமாறிய அவர், அப்படியே கீழே அமர்ந்து விட்டார்.

உடனடியாக மருத்துவர்கள் மோர்கனைப் பரிசோதித்து முதலுதவி அளித்தனர். மேலும் தலையில் உள்காயம் ஏற்பட்டதால் அவரால் ஆட்டத்தைத் தொடர முடிய வில்லை.

மோர்கனை பந்து தாக்கியதால் தாங்கள் நடுங்கிப் போனதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, எங்களில் சில வீரர்கள் அச்சத்தால் நடுங்கி விட்டனர். அண்மையில்தான் பிலிப் ஹியூக்ஸை இழந்துள்ளோம்.

எனவே, மோர்கனை பந்து தாக்கியதும் சில வீரர்கள் நடுங்கி விட்டோம். நல்லவேளையாக அவர் நலமாக இருக்கிறார். யாரும் வேண்டுமென்றே இப்படி செய்ய மாட்டார்கள்.

பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். இதுபோன்று யாரையும் பந்து தாக்கு வதை நிச்சயமாக பார்க்க விரும்ப மாட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

SHARE