நாட்டையோ மதத்தையோ அழிப்பதற்கு கடும்போக்காளர்களுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கடும்போக்காளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம் தவறுகளுக்கு பொறுப்பு இல்லையென்ற போதும் பலவந்தமாக அந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் மீதே விரல் நீட்டப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கறுப்பு ஜூலையின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் நினைவு கூறவேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.