யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு!!

900

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு பின்னால் வைத்து இளைஞனொருவனை குழுவொன்று வாளால் வெட்டியதில், குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத்(19) என்ற இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த இளைஞனை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்துச் சென்ற குழுவினர் வாளினால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE