யாழில் 70 பவுணுக்கு மேற்பட்ட நகைகள் கொள்ளை

195

யாழ்ப்பாணத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் பெருந்தொகை நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

70 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

உறக்கத்தில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்து விசிறி நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், வீட் டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன.

சூட்சுமமான முறையில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

SHARE