இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார்.
யாழ்ப்பாணத்திற்கு வந்த போது வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதாகவும் யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோசடி தெரிவித்தார்.
யாழ் நூலகத்தில் இன்று யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கு பௌதீகமான தொடர்புகள் மட்டுமின்றி, கலாச்சாசர ரீதியான விடயங்களில் ஒன்றுப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள்.
யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி.
யாழில் நிர்மாணித்து கொடுக்கப்படும் கலாச்சார நிலையம் மிகவும் புரதன நுட்பம் வாய்ந்த கலாச்சார விடயங்களை அடையாளப்படுத்த போகிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் உலகத்தின் மிகப் பெரிய நூலகமாக இருந்துடன் அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன.
பின்னாளில் அது எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட புத்தங்களை நாங்கள் வழங்குவோம். மிகவும் பிரசித்தமான மற்றும் முக்கியமான புத்தகங்களை வழங்குவோம்.
நூலகம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம். எடுத்துக்கொண்ட பணிகளை எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி செய்து முடிப்போம்.
யாழில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் அமையும்.
தலைமன்னார் ரயில் பாதையை திறந்து வைத்து, கலாச்சார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியது, வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைப்பது என்பன திரிவேணி சங்கம் போன்றது என தான் கருதுவதாகவும் இந்திய பிரதமர் மோடி கூறினார்.
<iframe width=”420″ height=”315″ src=”https://www.youtube.com/embed/gCMsIlxDV6Q” frameborder=”0″ allowfullscreen></iframe>