யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துள்ள தமது மகளைப் பார்ப்பதற்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குடும்பம் ஒன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் கோரவிபத்து!

634

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துள்ள தமது மகளைப் பார்ப்பதற்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குடும்பம் ஒன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து டொல்பின் ரக வாகனத்தில் புறப்பட்ட குடும்பத்தில் குடும்பத் தலைவராக புபாலப்பிள்ளை தெய்வேந்திரராசா (வயது 47) வாகனத்தைச் செலுத்திச் சென்றிருக்கின்றார். அவருடன் அவரின் மனைவி வசந்தாதேவி (வயது 46), அவர்களுடைய மகள் வித்யாராணி (வயது 14) ஆகியோருடன் அவர்களின் குடும்ப நண்பரான றொசாந்தன் (வயது 49) ஆகியோர் பயணமாகியிருக்கின்றனர்.

ஏ-9 நெடுஞ்சாலை ஊடாக குறித்த வாகனம் இன்று முற்பகல் 10.30மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த போது வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரம் ஒன்றில் மோதி பாரிய விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றது.

சம்பவத்தில் தெய்வேந்திரராசா சிறிய காயங்களுக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். அவர்களுடைய மகள் வசந்தாதேவியும் நண்பர் றொசாந்தனும் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வசந்தாதேவி ஆபத்தான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக  தெரிவிக்கின்றன.

1

2

3

4

5

6

7

8

910

Comments

SHARE