யாழ்ப்பாணத்தில் வாள் வீச்சு சம்பவம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி! இருவர் காயம்!

634

யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாள் வீச்சு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இந்த சம்பவத்தில் பலியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்குணானந்தம் அருளநாயகி (50), யசோதரன் மதுஷா(27), நிர்குணானந்தம் சுபாங்கன்(19) ஆகியோரே பலியானவர்களாவர்.

பலியானர்வர்களின் சடலங்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிர்குணானந்தம் தர்மிகா(25),  த. யசோதரன்(30) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

இச்சம்பவத்திற்கு காதல் பிரச்சினையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

 

SHARE