யாழ்ப்பாணத்தில் 8 இந்தியர்கள் கைது!!

841

Jafffna-300x224சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள விடுதியில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

SHARE