யாழ்ப்பாணத்தைச் சுதந்திர பிரதேசமாக மாற்றிய பின்பே யாழ்பாணத்தை விட்டு செல்வேன் – இளஞ்செழியன்

407

izancheliyan-45447e

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்வில் உரையாற்றும் போது எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு யாழ்ப்பாணத்தை மாற்றுவதற்கு தன்னுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் தம்மைப் பாதுகாப்பதற்கான உரிமை சட்டத்தில் உள்ளதாகவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெண்கள் நள்ளிரவில் கூட தாம் சுகந்திரமாக நடமாடுகிறோம் என குரல் எழுப்பும் போதே தான் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நள்ளிரவிலும் சுதந்திரம் என்று யாழ்ப்பாண பெண்கள் கூறவேண்டும்! நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாண குடாநாட்டு பெண்கள் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாண நகரில் தாம் சுதந்திரமாக திரிகிறோம் என குரல் எழுப்பவேண்டும் என்பதே தமது ஆசை என யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற சர்வோதய அமைப்பின் சிறந்த சமூக சேவகர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

SHARE