யாழ் காக்கை தீவுப் பகுதியில் துர்நாற்றத்துடன் வெளியாகும் புகை இது.யாழ் மாநகரசபை ஆணையாளரின் திறமையான கழிவகற்றும் முகாமைத்துவம் இதுதான். தெருவால் செல்லும் எத்தனை மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாகின்றார்கள் என்பதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாது நடாத்தப்படும் இந்தச் செயற்பாடுபற்றி எவரும் கவனிப்பதாகத் தெரியவில்லை.
யாழ் மாநகரசபை ஆணையாளர் தகவல் தொழில் நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர் என மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பதவிக்கு வந்த புதிதில் ஜீ.பி.எஸ் சிஸ்டம் என்று கூறி அதிகாரிமார் பலருக்கு கைத் தொலைபேசி கொடுத்து நீங்கள் எங்கு நிற்கின்றீர்களோ அந்த இடம் எனக்கு இங்கே தெரியவரும். நான் இருந்த இடத்தில் உங்களைக் கண்கானிப்பதற்காகத் தான் இதைத் தருகின்றேன் என தெரிவித்து பலரையும் யோசிக்க வைத்தவர் யாழ் மாநகரசபை ஆணையார்.
தனது அலுவலர்களை கையாளும் யாழ் மாநகரசபை ஆணையாளர் யாழ் மாநகரத்தை சரியான முறையில் கையாள்வதில்லை என பலரும் குறைப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவ்வாறானவற்றை எரிக்கும் போது மக்கள் நடமாட்டமற்ற இரவில் எரிக்கலாம். அல்லது தகவல்தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள ஆணையாளர் கூகிளில் தேடியாவது இந்த விடயத்தைக் கையாளலாம். அதை விட்டு உழவு இயந்திரங்களுக்கு ஜீ.பி.எஸ். கருவி பூட்டுவது. ஊழியர்களுக்கு கைத் தொலைபேசி கொடுப்பது, புதிய கணனி மென்பொருட்களை வாங்கி பரீட்சித்துப் பார்ப்பது என்பவற்றைக் குறைத்து நகர முன்னேற்றத்தில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாநகரசபைக்குள் இருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.