நேற்று மதியம் 1.45 மணியளவில் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் இருந்து பாடசாலை மாணவியை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி யொன்று கே.கே.எஸ் பிரதான வீதியால் யாழ் நோக்கி வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் மற்றும் பாடசாலை மாணவி காயமடைந்தனர். காயமடைந்த மாணவி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தானது பிரதான வீதியினை ஓட்டோ போக்குவரத்து விதிகளை மீறி பயணித்ததனால் ஏற்பட்டதாக விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலை முடிவடையும் நேரத்தில் மிக வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாருடன் ஓட்டோ மோதியது. இதனால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் தணிந்தது, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.