யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு வர எரிபொருளுக்கு 92 ஆயிரம் ரூபா செலவு…

295

நாடாளுமன்றக்கூட்டங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து, பணிகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல எரிபொருளுக்கு மாத்திரம் 92 ஆயிரம் ரூபாய் செலவாவதாக அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர் பதுளையில் இருந்து வர 75 ஆயிரம் செலவு

யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு வர எரிபொருளுக்கு 92 ஆயிரம் ரூபா செலவு | Parliament Members Request To Speaker

அத்துடன் அம்பாறையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் ஒரு பயணத்திற்காக மாத்திரம் எரிபொருளுக்கு 66 ஆயிரம் ரூபா செலவிடப்படுவதாகவும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு 75 ஆயிரம் ரூபா செலவாவதாகவும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 54 ஆயிரம் ரூபா செலவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கொடுப்பனவு போதவில்லை

யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு வர எரிபொருளுக்கு 92 ஆயிரம் ரூபா செலவு | Parliament Members Request To Speaker

இவ்வாறு அதிகரித்துள்ள எரிபொருள் செலவை நாடாளுமன்றத்தில் வழங்கும் எரிபொருள் கொடுப்பனவால் ஈடுசெய்ய முடியவில்லை எனவும் இதனால், இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்று தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு லீட்டர் டீசலுக்கு 111 ரூபா வழங்கப்படுகிறது. எனினும் நாடாளுமன்ற அதிகாரிகள் எரிபொருள் கொடுப்பனவை வழங்கும் போது எரிபொருளின் தற்போதைய சந்தை விலையை செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

SHARE