யாழ்.பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கைச் சேர்ந்த 63 வயதான எஸ். செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் சந்திக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.