யாழ் மாவட்ட முன்பள்ளிச்சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் 24.7.2014 அன்று யாழ் இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது. மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், யாழ் மாவட்டத்தின் ஐந்து வலயங்களையும் சேர்ந்த ஏராளமான முன்பள்ளிச்சிறார்கள் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். படங்களும் தகவலும் :- அன்னக்கிளி