யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை செய்ய வேண்டுமென மலேசியாவின் பினாங் மாநில இரண்டாம் பிரதி முதலமைச்சர் பீ.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கொயம்பத்தூருக்கு விஜயம் செய்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைக்கு இந்தியா ஆதரிக்கின்றதா இல்லையா என்பது முக்கியமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் வெளிக்கொணர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
உள்ள விசாரணைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை இலங்கை அரசாங்கம் மீள அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.