முன்னணி வீடியோ பகிரும் தளமாக காணப்படும் யூடியூப் ஆனது விளம்பர சேவை ஒன்றினையும் வழங்கிவருகின்றமை தெரிந்ததே.
வீடியோக்களின் இடையே காட்சிப்படுத்தப்படும் இவ் விளம்பர சேவையின் ஊடாக வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் இலாபம் ஈட்டிக்கொள்ள முடியும்.
இவ் விளம்பர சேவையில் உள்ளடக்கப்படும் சில விளம்பரங்கள் வீடியோக்கள் செயற்பட ஆரம்பிக்க முன்னர் காட்சிப்படுத்தப்படும்.
எனினும் பார்வையாளர்கள் விரும்பாதவிடத்து அவ் விளம்பரங்களை சில செக்கன்களின் பின்னர் தவிர்த்துவிட (Skip) முடியும்.
இவ் வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினை கொண்டுவர யூடியூப் தீர்மானித்துள்ளது.
இதன்படி குறித்த விளம்பரங்கள் 30 செக்கன்கள் வரை காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், அவற்றினை தவிர்த்துவிடும் வசதியினை நிறுத்தவுள்ளது.
இதன் காரணமாக விளம்பரங்களை பார்வையிட்ட பின்னரே வீடியோக்களை பார்வையிட முடியும்.
இம் மாற்றம் 2018ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.