
தனுஷ், சாய் பல்லவி
தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
#RowdyBaby video song hits MASSive 800M+ Views with 3M+ Likes 🙂 #RowdyBabyHits800MViews
▶️ https://t.co/DboDG0xMC6#Maari2 @dhanushkraja @Sai_Pallavi92 @thisisysr @directormbalaji @vinod_offl @divomovies @RIAZtheboss pic.twitter.com/oy9E247dap
— Wunderbar Films (@wunderbarfilms) March 22, 2020
அந்த வகையில், தற்போது 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘யூடியூப்’பில் ரவுடி பேபி பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதோடு இந்த பாடல் இதுவரை 3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.