வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்னணியில் திகழும் யூடியூப் தளத்திற்கான தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது.இஸ்லாமியர்களுக்கு எதிரான வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை நீக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.
எனினும் அதனை தாய் நிறுவனமான கூகுள் நிறுவனம் நீக்க மறுத்ததை தொடர்ந்து யூடியூப் தளமானது 2013ம் ஆண்டு பாகிஸ்தானிய அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையிலே கூகுள் நிறுவனம் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து தற்போது அந் நாட்டு மொழியில் மட்டும் தொழிற்படக்கூடிய விசேட யூடியூப் பக்கத்தினை வடிவமைத்து சேவையை வழங்கவுள்ளது. |