பிரபல நடிகையின் காதல் வலையில் சிக்கிய யுவராஜ்

749
பாலிவுட் நடிகை லீபக்‌ஷி எல்லவாடி உடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்க்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.பாலிவுட் நடிகைகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே அடிக்கடி இனம் பிரியாத இணைப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஏற்கனவே இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காதல் வலையில் சிக்கி இருப்பது பற்றி பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகை லீபக்‌ஷி எல்லவாடி உடன் காதல் வலையில் வீழ்ந்துள்ளதாக பாலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றன.

பிரபல பேஷன் டிசைனரும், நடிகையுமான லீபக்‌ஷி எல்லவாடி உடன் போட்டிகள் இல்லாத நாட்களில் இரவு நேர கிளப்புகளில் அடிக்கடி யுவராஜ் சிங் காணப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வந்தவாறு உள்ளன.

இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யுவராஜ்சிங் ஏற்கனவே நடிகை கிம் சர்மா, மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர்களுடன் கிசுகிசுவில் விமர்சித்து பேசப்பட்டவர். ஆனால் தற்போதைய உறவு நீண்ட நாள் நீடிக்கும் வகையில், நெருக்கமான உறவாக இருப்பதாக இருதரப்பிலும் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

SHARE