சினிமாவில் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு மக்கள் பேராதரவு இப்போதெல்லாம் கொடுக்கிறார்கள்.
வீட்டுப் பெண்களை தாண்டி இளைஞர்களும் அவர்களுக்கு பிடித்த தொடர்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் எல்லா தொலைக்காட்சிகளிலுமே புத்தம் புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அப்படி சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. இதில் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் திரைப்படம் மட்டும் ஒளிபரப்பாக மற்ற நேரங்களில் சீரியல்கள் தான்.
கயல் தொடர்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு தொடர் கயல்.
செல்வம் அவர்கள் இயக்கும் இந்த தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள்.
இவர்கள் எப்போது கதையில் திருமணம் செய்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது விரைவில் அவர்களின் நிச்சதார்த்த கதைக்களம் இந்த வாரம் வர இருப்பதாக கூறப்படுகிறது.