ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

69

 

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் பலரும் இப்போது சாதித்து வருகிறார்கள்.

அப்படி பெண் இயக்குனர்கள் லிஸ்டில் முன்னணியில் இருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

முதன்முதலில் நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார், அப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அனிருத்தும் களமிறங்கினார்.

ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் ரீச் ஆகி வைரல் ஹிட்டானது. படத்திற்கு ரிலீஸ் நேரத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் காதலர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின் கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விக்ராந்த், விஷ்ணு விஷாலை வைத்து கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சொத்து மதிப்பு
இயக்குனராக தற்போது கலக்கிவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சினிமா மட்டுமின்றி பிரபல நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராகவும் இருக்கிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இயக்குனராக மட்டுமின்றி பாடகியாகவும் தன் திறமையை நிரூபித்துள்ள ஐஸ்வர்யா விசில், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE