ரஜினியுடன் கண்களால் காதல்- சோனாக்ஷி 

343


 ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. படம் பற்றி அவர் கூறியதாவது:மொழி தெரியாத படத்தில் நடிக்கிறோமே என்ற தயக்கம் இருந்தது. அப்பாதான் (சத்ருஹன் சின்ஹா) ‘ரஜினி என் நண்பர், தைரியமாக நடி’ என்று நம்பிக்கை தந்தார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் காட்சிகளை எனக்கு அழகாக விளக்கினார். வசனங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துவிட்டார்கள். தமிழ் உச்சரிப்புக்கும், முகபாவத்துக்கும் ரஜினி உதவினார். அதனால் என்னால் எந்த பிரச்னையும் இல்லாமல் நடிக்க முடிந்தது. 1940களில் நடக்கும் கதை என்பதால் கண்களால் காதலை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள்தான் அதிகம். பாடல் காட்சிகளில் கூட நெருக்கம் இல்லை. நண்பரின் மகள் என்று அவர்தான் ஆரம்பத்தில் தயங்கினார். அவர் மீதிருந்த மரியாதை எனக்கு முதலில் தடையாக இருந்தது. போகப்போக சகஜமாகிவிட்டது. நல்ல கதையும், கேரக்டரும் அமைந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன்

 

SHARE