ரஜினி, அஜித், விஜய் மூவருக்கும் இப்படியொரு ஒற்றுமையா!

209

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி, அஜித், விஜய்.

இவர்கள் மூவரும் முறையே ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத், அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இது எல்லாருக்கும் தெரிந்த தகவல் தான்.

தெரியாத தகவல் என்னவென்றால், விஜய் தளபதி-63 படத்திற்கு அடுத்ததாக மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இது நடந்தால், லோகேஷுக்கு இது 3வது படம். இரண்டாவது படமாக கார்த்தியின் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

அதே போல் அஜித்தை இயக்கும் எச்.வினோத்திற்கும் நேர்கொண்ட பார்வை 3வது படம். 2வது படமாக கார்த்தியை வைத்து தீரன் படத்தை இயக்கியிருந்தார்.

இதுமட்டுமில்லாமல் ரஜினியை வைத்து முதன்முதலாக கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித்திற்கும் அது 3வது படம். 2வது படமாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை தான் இயக்கியிருந்தார்.

இவர்கள் மூவருமே கார்த்தியை வைத்து படம் இயக்கி அதற்கு அடுத்த படமே பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

SHARE