ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

176

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

பொதுவாக நாம் வாகனங்களில் சாலையில் செல்லும் போது, சிறிய கல் இருந்தால் கூட அது நமக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தும்.

அப்படி இருக்கும் போது ரயில் தண்டவாளத்தில் மட்டும் ஏராளமான கற்கள் நிரம்பிக் கடக்கும். ஆனால் அது ரயில் வண்டிகள் செல்லும் போது, எந்த விதமான இடையூறுகளையும் ஏற்படுத்துவதில்லை.

அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று நம்மில் பலபேர்கள் யோசித்து இருப்போம்.

எனவே ரயில் தண்டவாளத்தில் அதிகமாக கற்கள் நிரம்பி இருப்பதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

ரயில் தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள் அதிகமாக இருக்க என்ன காரணம்?

தண்டவாளத்தில் செல்லும் ரயில் அதிக எடையுடன் இருக்கும். மேலும் ரயில் வண்டிகள் வேகமாக செல்வதால், அழுத்தம் அதிகம் இருக்கும். எனவே தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு, தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் அதிகமாக போடப்பட்டுள்ளது.

அதிக வெப்பம், நிலஅதிர்வு மற்றும் கடினமான வானிலையின் போதும் ரயில் தண்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். இதனால் தண்டவாளங்கள் விலகாமல் தடுப்பதற்கு, தண்டவாளங்களில் கற்கள் அதிகமாக நிரப்பப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது, மரத்தின் விட்டங்கள் மூலம் ரயில் வண்டிகள் வழுக்காமல் தடுப்பதற்கு, கூர்மையான கற்கள் போடப்பட்டுள்ளது.

நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு, ரயில் தண்டவாளங்களில், ஜல்லிக் கற்களை வைத்து உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியின் காரணமாக தண்டவாளங்களில் செல்லும் ரயில் வண்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் தடுப்பதற்கும், தண்டவாளங்களில் அதிகமாக ஜல்லிக் கற்கள் போடப்பட்டுள்ளது.

SHARE