ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு; வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்…!
வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 04.01.2024இன்று வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநர்செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
மேலும் இச் சந்திப்பில் சமூகஆர்வலர் கிருஷ்ணபிள்ளை சிவகுரு அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
