ரஷ்யாவின் அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் ; ஐ.நா.எச்சரிக்கை

153

 

ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது குறி வைத்து ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஐ.நா.அதிகாரிகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர்.

ரஷ்யாவில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஐரோப்பாவின் இந்த மிகப் பெரிய அணுமின் நிலையம் துவக்கத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு போர் துவங்கிய போது, ரஷ்ய ராணுவம் இதனை கைப்பற்றியது. உக்ரைனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் ரஷ்யா அணுமின் நிலையங்கள் மீது குறிவைத்து ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன.

ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. இல்லையெனில் அணு கதிர்வீச்சு ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கும்.

ஐ.நா.அதிகாரிகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2021ம் ஆண்டு பிப்.24ம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது.

இரண்டு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வரும் போரில் ஏராளமான பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

SHARE