ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்! உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

147

 

ரஷ்யாவில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய தலைநகரில் உள்ள கிராஸ்னோகோர்க் நகரில் நேற்று முன் தினம் (22-03-2024) இசை நிகழ்ச்சி நடைபெறுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது அந்த இசை நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியில் சரமாரியாக சூட்டு வீழ்த்தியுள்ளனர்.

மேலும் , இசை நிகழ்ச்சி இடம்பெறும் இடத்தில் வெடிகுண்டு, பெற்றோல் குண்டு வீசியதில் தீ அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

SHARE