ரஷ்யா மீதான பொருளார தடைகளை தீவிரப்படுத்த ஜி-7 நாடுகள் தீர்மானம்

751
யுக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர்.இருப்பினும் இதுவரை பொருளாதாரத் தடைகள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் எதிர்வரும் திங்கட்கிழமை பொருளாதாரத் தடைகள் தொடர்பான விபரங்களை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

யுக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் கிளர்சியாளர்களை ரஷ்யா வழிநடத்துவதாக மேற்குலக நாடுகள் தெரிவிக்கின்றன.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த தலைவர்கள், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அனைவரும் ஒருமித்தமாக இதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

ஏற்கனவே, கிரிமியாவை தன்னுடன் இணைத்த விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கிரிமியாவைப் போன்று, தற்போது கிழக்கு யுக்ரைனிலும் இத்தகைய நிலை உருவாகியுள்ளது.

ரஷ்யா இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE