ரஷ்ய இராணுவத்தை உளவு பார்க்கும் அமெரிக்கா!!

858

fli

உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா சுயாட்சி பிரதேசத்தை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி விட்டது. அதை நாட்டுடன் இணைக்கும் திட்டத்திலும் தீவிரமாக இறங்கி வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்பட மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உதவியை உக்ரைன் இடைக்கால அரசு கேட்டு வருகிறது.

எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை தற்போது கிரீமியா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்யா ராணுவத்தின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கிறது.

போலந்து, ருமேனியா வான்வெளியில் மூன்று உளவு விமானங்களை அனுப்பி ரஷ்யா ராணுவத்தை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் கிரீமியா எல்லைப்பகுதியில் இருக்கும் உக்ரைன் விமானப்படை முகாமிற்கு 10 பேர் கும்பல் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு மோதலில் ஈடுபட்டனர். தங்களுக்கு 10 ராணுவ வாகனத்தை தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

SHARE