ரஷ்யாவில் நடைபெற்ற பாலைவன லொறி ஓட்டும் போட்டி ஒன்றில் நிகழ்ச்சியை படமெடுக்க வந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Astrashan Oblast பகுதியில் உள்ள பாலைவனத்தில் Zoloto Kagana எனப்படும் லொறிகளுக்கான போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் பங்கேற்ற லொறி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் மீது மோதி விபத்துள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு அந்த வாகனத்தில் சிக்கிய நபரை மீட்க முனைந்துள்ளனர்.
பின்னர் அந்த புகைப்படக்கலைஞரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்தியது கனரக வாகனம் என்பதால், விபத்தில் சிக்கிய நபரின் விலா எலும்புகள் பல நொறுங்கியுள்ளதாகவும், அவரது கை உடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், விபத்துக்குள்ளான நபர் லொறியின் மிக அருகில் நின்று புகைப்படங்களை எடுத்து வந்துள்ளதாகவும், விபத்து நேர்ந்த பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் வந்து சம்பந்தப்பட்ட நபரை மீட்டதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களே விபத்தில் சிக்கிய புகைப்படக்கலைஞரையும் அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.