ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த தடை குறித்து அறிவித்துள்ளார்.
ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் சிறையில் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து கனடா கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
ரஸ்யா அரசாங்கம் தொடர்ச்சியாக திட்டமிட்ட அடிப்படையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ரஸ்ய அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நவால்னியின் மரணத்திற்கு ரஸ்ய அரசாங்கமே பொறுப்பு என முன்னதாக கனடா குற்றம் சுமத்தியிருந்தது.
நாவல்னியின் மரணத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் தடை அறிவிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாவல்னியின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.