ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஓர் கொடூர அரக்கன் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ குற்றம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவால்னியின் மரணம் தொடர்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
நாவால்னியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மிக வேதனையான முறையில் நாவால்னி உயிரிழந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக தைரியமாக போராடிய தலைவர் நாவால்னி என பிரதமர் தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தை பேணுவதற்கும், பாதுகாப்பதற்கும் குரல் கொடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவரின் மரணத்திற்கு வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ், என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் உள்ளிட்டவர்களும் இரங்கல்களை தெரிவித்துள்ளதுடன், ரஸ்ய ஜனாதிபதிக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.