ராஜபக்ச அரசாங்கம் வீணாக பணத்தை செலவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ரூபா செலவில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளுக்காக கடந்த அரசாங்கம் 100 ரூபாவை செலவிட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியான வீண் விரயமாக்கிய யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்திடம் நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று இருப்பதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.