ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சி தொடர்பில் ஊவா மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு

554
மக்கள் கூட்டம் குறைவால் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி
பதுளை வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் மக்கள் குறைவாக கலந்து கொண்டிருந்ததால், ஜனாதிபதி அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கூட்டத்தில் 200 பேருக்கும் குறைவான மக்களும் சுமார் 500 பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சி தொடர்பில் ஊவா மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலைமையை மாற்ற ஜனாதிபதி கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்ற போதிலும் கூட்டங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 

SHARE