ராஜாங்க அமைச்சு பொறுப்பினை ஏற்க மறுத்த அரசாங்கத்தின் முக்கிய நபர்…

301

சுசில் பிரேமஜயந்தவின் ராஜாங்க அமைச்சுப் பொறுப்பினை எஸ்.பி. திஸாநாயக்க ஏற்க மறுத்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைகல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வந்த கலாநிதி சுசில் பிரேமஜயந்த அண்மையில் பதவி நீக்கப்பட்டார்.

அரசாங்கத்தை பொதுவெளியில் விமர்சனம் செய்த காரணத்தினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த ராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அதனை அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவியை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான பல்வேறு காரணங்களையும் எஸ்.பி அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கு அறிவித்துள்ள போதிலும் அந்தக் காரணிகள் எவை என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும், குறித்த ராஜாங்க அமைச்சுப் பதவி குறித்து எஸ்.பி. திஸாநாயக்கவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவத்தாக தெரிவிக்கப்படுகின்றது.

விரைவில் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்பய்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE