ராமராக ரன்பிர் கபூர், சீதாவாக நடிகை சாய் பல்லவி.. படப்பிடிப்பி இருந்து கசிந்த புகைப்படம் இதோ

176

 

தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டல் படத்தில் நடிக்கிறார்.

சமீபகாலமாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தும் தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர் சாய் பல்லவி. அமீர் கான் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

சீதாவாக சாய் பல்லவி
மேலும் ராமாயணம் கதையை மையமாக எடுக்கப்பட்ட வரும் திரைப்படத்தில் சீதாவாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ராமராக ரன்பிர் கபூர், சீதாவாக நடிகை சாய் பல்லவி நடிக்கும் காட்சியின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது.

SHARE