ரிசார்ட் – ஹிஸ்புல்லா – அசாத்சாலிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை

191

கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாது பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தேசிய மகா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

அத்துடன் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை ஆளுனர் பதவியிருந்து நீக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனையை புதன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இராஜகிரியவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.<

SHARE