உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது அறிக்கை இரண்டு வாரத்திற்குள் சமர்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதற்கான வேண்டுக்கோளினை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விடுத்துள்ளார்.
மேலும், அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா பிரேரனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையினை இரண்டு வாரத்திற்குள் சமர்பிக்கப்பட வேண்டும். அப்போது தான் அடுத்த கட்டம் குறித்து தீர்மானித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
அரசாங்கத்திற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரனை சமர்பிக்கப்பட்டுள்ளமையினால் அதற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டியது பாராளுமன்றத்தின் சம்பிரதாயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.