அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சில :
* தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதலை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு இராணுவ தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமை.
* சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய இம்ஷான் அஹமட் இப்ராஹிமின் கைத்தொழிற்சாலைக்கு வரையறுக்களுக்குட்படாத வகையில் உற்பத்தி பொருட்கள் விநியோகித்மை.
* வெடிப்பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாமல் குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டுள்ளமையின் தொடர்புடைய அரசியல்வாதியின் அழுத்தம் காணப்பட்டுள்ளது என்ற சந்தேகம்.
* அமைச்சரின் சகோதரன் ரிப்கான் பதியுதீன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் விடுதலை செய்தமையின் பின்னணி என்ன.
* தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்தவுடன் விசாரணைகளுக்க தடைகளை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இவரது பெயரே குறிப்பிடப்பட்டமை.