கிளிநொச்சி திருவையாறு அம்பாள்நகரைச்சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது வாலிபன் நேற்று இரவு 8.50 மணியளவில் அவரது வீட்டில்வைத்து ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப்பிரிவால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.1994ம் ஆண்டு பிறந்த இவர் வன்னியில் போர்க்காலத்தில் சிறிய பள்ளி மாணவனாகவே இருந்துள்ளார்.இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புகள் எந்த தொடர்புகளும் இல்லை என உறுதிபட தெரிவிக்கப்படுகின்றது.நைற்றா எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற இவர் பின்பு அசோக்லேலண்ட கம்பினியில் படித்துக்கொண்டிருந்த நிலையில் தனது தாயின் பிறந்த நாளுக்காக வீட்டுக்கு வந்தபொழுது ரி.ஜ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வயது வேறுபாடின்றி ரி.ஜ.டியினரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய தொடர்ந்தேர்ச்சியான தமிழர்வாழும் பகுதிகள் அச்சமும் நிம்மதி இழந்து நிலையுடனும் காணப்படுகின்றது.