ருதுராஜ் சதம் வீண்! ஸ்டோனிஸ் அதிரடியில் மண்ணை கவ்விய CSK

492

 

சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

ருதுராஜ் சதம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024-ன் 39வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ஓட்டங்கள் எடுத்தது.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ஓட்டங்கள் விளாசி அணியின் அதிகபட்ச ஓட்டம் குவித்த வீரராக திகழ்ந்தார்.

அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 27 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்தார்.

மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அபார சதம்
211 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு தொடக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டது. டி காக் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தனர்.

பின்னர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து 55 ஓட்டங்கள் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர். படிக்கல் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஸ்டாய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி 70 ஓட்டங்கள் சேர்த்து லக்னோவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். பூரன் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஸ்டாய்னிஸ் மற்றும் தீபக் ஹூடா ஜோடி 55 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டாய்னிஸ் 56 பந்துகளில் 124 ரன்கள் விளாசி அபார சதம் அடித்தார்.

ஹூடா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட்களால் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அத்துடன் லக்னோ புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை 5வது இடத்தில் உள்ளது.

SHARE