பிரகாஷ்ராஜ் தற்போது இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் ‘உன் சமையலறையில்’.
மலையாளத்தில் வெளிவந்த சால்ட் அன்ட் பெப்பர் என்கிற படத்தைதான் தமிழில் உன் சமையலறையில் என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுடன் முதன்முறையாக சினேகா இணைந்து நடித்துள்ளார். மற்றும் ஊர்வசி, தம்பிராமைய்யா, குமரவேல் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
படத்துக்கு இசையைமைத்திருக்கிறார் இசைஞானி. இளையராஜா. சமீபத்தில் இப்படம் தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும்படியான யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து ‘உன் சமையலறையில்’ படம் ஜூன் மாதம் 6-ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் தெலுங்கிலும், கன்னடத்திலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.