ஐடெல் நிறுவனம் மிகக்குறைந்த விலையில் அறிமுகம் செய்த பல அம்சங்களுடைய ஸ்மார்ட்போனினை பற்றி பார்க்கலாம்.
A05s மாடல்
கடந்த மார்ச் மாதம் A05s மாடல் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் ஐடெல் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்நிறுவனம் தனது A05s மாடலின் 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஐடெல் A05s மாடலின் விலை ரூ.6,099 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், க்ரிஸ்டல் புளூ, குளோரியஸ் ஆரஞ்சு, மீடோ கிரீன் மற்றும் நெபுளா பிளாக் ஆகிய நிறங்களில் இந்த மொபைல் கிடைக்கிறது.
என்னென்ன அம்சங்கள்
6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே (6.6-inch HD),1600×720 பிக்சல், 60Hz ரிப்ரெஷ் ரேட்
யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர் (Core Unisoc processor)
4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. (4GB of RAM 64GB)
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் (8-megapixel single rear camera, LED flash)
5MP செல்ஃபி கேமரா (5-megapixel camera selfies)
டூயல் 4ஜி வோல்ட்இ (4G LTE)
வைபை, ப்ளூடூத் (Bluetooth)
4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி (4,000mAh battery)
5 வாட் அடாப்டர் (5 w adapter)
கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
3.5mm ஆடியோ ஜாக் (3.5mm jack)