ரெறான்ரோ நோக்கிப் பயணித்த விமான கட்டுப்பாட்டு அறையில் மர்ம நபர்

96

 

அமெரிக்காவிலிருந்து ரொறன்ரோ நோக்கிப் பயணித்த விமானமொன்றின் கட்டுப்பாட்டு அறையில் மர்ம நபர் ஒருவர் பிரவேசித்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யுனைடட் எயர்லைன் விமான சேவை நிறுவன விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அனுமதி இல்லாத நபர் ஒருவர் விமான கட்டுப்பாட்டு அறைக்குள் பிரவேசித்தமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

அனுமதி இல்லாத ஒருவர் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் பிரவேசிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

விமான பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமான கட்டுப்பாட்டு அறைக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பிரபல விளையாட்டுக் கழகமொன்றின் வீரர்கள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE