இன்று காலை (15.04.2014) வவுனியா வைரவப்புளியங்குளம் ஜங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள குகராஜாவின் நினைவுச்சிலைக்கு ரெலோ அமைப்பின் தலைவரும், தற்போதைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ரெலோ அமைப்பின் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், எதிர்வரும் 18ம் திகதி தீர்மானித்ததன் படி தமிழர்வாழ்கின்ற பிரதேசங்கள் எங்கிலும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்படும் அதனை யாராலும் தடுக்கமுடியாது என்று ஆவேசத்துடன் உரையாற்றினார். எனினும் இறந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுததுவது பற்றி அவர் குறிப்பிடவில்லை. கிறிஸ்ரி குகராஜாவுக்கு அஞ்சலி செலுத்தமுடியுமாயின் ஏன் இறந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தமுடியாது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தகவலும் படங்களும் :- இ.தர்சன்