ரொறன்ரோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை

83

 

ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு சில பகுதிகளில் 15 மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹமில்டன் முதல் கிங்ஸ்டன் வரையில் பனிப்பொழிவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE